Home One Line P1 பத்து சாபி இடைத்தேர்தலில் தேசிய முன்னணி பங்கேற்காது

பத்து சாபி இடைத்தேர்தலில் தேசிய முன்னணி பங்கேற்காது

537
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட்19 தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பதற்காக பத்து சாபி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பங்கேற்க வேண்டாம் என்று தேசிய முன்னணி மற்றும் பார்ட்டி சிந்தா சபா (பி.சி.எஸ்) முடிவு செய்துள்ளன.

தேசிய முன்னணி தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி கூறுகையில், புதிய கொவிட்19 சம்பவங்கள் சபா தேர்தலுக்குப் பிறகு உயர்ந்துள்ளது என்று கூறினார்.

“தேசிய முன்னணி தேர்தல் ஆணையத்தின் விருப்பத்திற்கு விட்டுவிட்டது. பிரச்சார காலம் மற்றும் வாக்களிக்கும் தேதியை பின்னர் தீர்மானிக்க வேண்டும்.

#TamilSchoolmychoice

“மக்களின் நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியம் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்று தேசிய முன்னணி கருதுகிறது” என்று அவர் ஓர் ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.

இதற்கிடையில், பிசிஎஸ் பொதுச் செயலாளர் அன்சாரி அப்துல்லா கூறுகையில், மக்களின் வாழ்க்கையும் பாதுகாப்பும் அனைத்து அரசியல் கருத்துகளையும் விட முக்கியமானது என்று கூறினார்.

“சபா மிகவும் கடுமையான கொவிட்19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தலில் போது சுகாதார அமைச்சு வழங்கிய நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை, தொற்று பரவுவதைத் தடுக்க தவறிவிட்டது என்பது தெளிவாகிறது” என்று அவர் கூறினார்.

“பத்து சாபியில் மேலும் ஒரு பிரச்சாரம் மற்றும் இடைத்தேர்தல் செயல்முறை இருந்தால் சபாவால் புதிய கொவிட்19 தொற்று பரவலைத் தாங்க முடியாது” என்று அவர் கூறினார்.

ஏராளமான வாக்காளர்கள், தேர்தல் பணியாளர்கள், பிரச்சாரகர்கள், வேட்பாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மாநிலத் தேர்தலுக்குப் பிறகு கொவிட்19 நோய்த்தொற்றுக்கு ஆளாகினர்.

இதுவரை, சபாவுக்கு வெளியே 301 கொவிட்19 சம்பவங்கள் செப்டம்பர் 20 முதல் அம்மாநிலத்திற்கு பயணம் செய்ததால் ஏற்பட்டது.

நேற்று, தேசிய கூட்டணியும், தேசிய முன்னணியும் வாரிசானுக்கு தொகுதியைப் தற்காக்க வழிவகுக்க வேண்டும் என்ற ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கின் கூற்றுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியானது.

அம்னோ இளைஞர் தலைவர் அசிராப் வாஜ்டி துசுகியும் இந்த முடிவை ஆதரித்தார்.

அக்டோபர் 2-ஆம் தேதி பத்து சாபி நாடாளுமன்ற உறுப்பினர் லீயூ வுய் கியோங் காலமானதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் விரைவில் இடைத்தேர்தலை நடத்தப்போவதாகக் கூறியது.