Home One Line P1 கொவிட்19: புதிய சம்பவங்கள் அதிர்ச்சி தரும் வகையில் 561 ஆக உயர்வு – 2 பேர்...

கொவிட்19: புதிய சம்பவங்கள் அதிர்ச்சி தரும் வகையில் 561 ஆக உயர்வு – 2 பேர் மரணம்

1034
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 11) வரையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிர்ச்சி தரும் வகையில் புதிய சம்பவங்களின் எண்ணிக்கை 561 ஆக உயர்ந்துள்ளது. கொவிட்-19 தொற்று தொடங்கியதிலிருந்து கடந்த அக்டோபர் 6-ஆம் தேதிதான் 691 ஒரு நாள் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன. மலேசிய வரலாற்றில் இதுவே மிக அதிகமான எண்ணிக்கையாக அப்போது அறிவிக்கப்பட்டது.

அதற்கடுத்து இன்றைய புதிய சம்பவங்களின் எண்ணிக்கைதான் இரண்டாவது மிக அதிகமான ஒருநாள் எண்ணிக்கையாகும்.

கொவிட் 19 தொற்றுகளின் நேற்றைய எண்ணிக்கை 374 இருந்தது. ஒரே நாளில் சுமார் 200 தொற்றுகள் அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

#TamilSchoolmychoice

133 பேர் இன்று குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறி உள்ள நிலையில், மொத்தமாக மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வெளியேறியவர்களின் எண்ணிக்கை 10,913- ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா முகநூல் பக்கத்தின் வழி நேரலையாக ஒளிபரப்பான இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

561 புதிய சம்பவங்களைத் தொடர்ந்து, நாட்டில் இதுவரையில் பதிவான மொத்த சம்பவங்களின் எண்ணிக்கை 15,657 ஆக உள்ளது என்றும் அவர் கூறினார்.

மொத்தம் 4,587 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 90 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர், 29 பேருக்கு சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

இன்று புதிதாக 2 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மரணங்களின் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளது.

சபாவில் அதிகமாக 488 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. கெடாவில் 16 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. சிலாங்கூரில் 26 சம்பவங்களும், கோலாலம்பூரில் 15 சம்பவங்களும் பதிவாகி உள்ளன.

இதற்கிடையில் கொவிட்-19 தொற்று அபாயம் காரணமாக 1 உத்தாமா பேரங்காடியும், டுரோபிகானா கோல்ப் கிளப் வளாகமும் மூடப்பட்டிருக்கிறது.