கோலாலம்பூர்: சுங்கை பேலேக் சட்டமன்ற உறுப்பினர்ரோனி லியு மாமன்னருக்கு எதிராக தேசத் துரோகக் கருத்து வெளியிட்டதை அடுத்து கைது செய்யப்பட்டார்.
தாய்லாந்தில் அதன் மன்னருக்கு எதிராக நடந்து வரும் எதிர்ப்புப் போராட்டாதை குறிப்பிட்டு அவர் தமது முகநூலில் பதிவிட்டிருந்தார்.
அவரது வழக்கறிஞர் ஜாதவிஷ் சந்திரா கூறுகையில், இன்று காலை பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல் துறை தலைமையகத்தில் விசாரணைக்கு வந்தபோது அவரது கட்சிக்காரர் புக்கிட் அமான் அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டதாகக் கூறினார்.
தேசத் துரோகச் சட்டம் மற்றும் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத்தின் கீழ் மேலதிக விசாரணைகளுக்கு வசதியாக இந்த கைது நடவடிக்கைக் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
“இப்போது பாங்காக்கில், மக்கள் மன்னரை வேண்டாம் என்று சொல்கிறார்கள்” என்ற தலைப்பில் போராட்டத்தின் பல புகைப்படங்களை அவர் பதிவிட்டிருந்தார்.
“பாங்காக்கின் தற்போதைய நிலைமை”, என்று சீன மொழியிலும் அவர் எழுதியிருந்தார்.