Home One Line P1 மெக் பிளான்ட்: புதிய தாவர அடிப்படையிலான ‘பர்கரை’ மெக்டொனால்ட்ஸ் அறிமுகம் செய்கிறது

மெக் பிளான்ட்: புதிய தாவர அடிப்படையிலான ‘பர்கரை’ மெக்டொனால்ட்ஸ் அறிமுகம் செய்கிறது

879
0
SHARE
Ad

நியூ யார்க்: துரித உணவு நிறுவனமான மெக்டொனால்ட்ஸ் திங்களன்று இறைச்சி சாப்பிடாத மக்களின் எண்ணிக்கையைப் பூர்த்தி செய்வதற்காக “மெக் பிளான்ட்” (McPlant) என்ற புதிய தாவர அடிப்படையிலான ‘பர்கரை’ அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது.

டன்கின் மற்றும் ஸ்டார்பக்ஸ் போன்ற பிற நிறுவனங்களும் வளர்ந்து வரும் தாவர அடிப்படையிலான சந்தையில் காலடி வைத்துள்ளன. பயனீட்டாளர்கள் தங்கள் உடல்நலம், கால்நடை வளர்ப்பின் சுற்றுச்சூழல் மற்றும் விலங்கு உரிமைகள் ஆகியவற்றின் தாக்கத்தைப் பற்றி அதிகம் அறிந்திருக்கிறார்கள்.

சைவ இறைச்சி மாற்றுகளில் நிபுணத்துவம் வாய்ந்த ‘பியண்ட் மீட்’ (Beyond Meat) என்ற நிறுவன ஒத்துழைப்புடன் மெக்டொனால்டு ஏற்கனவே கனடாவில் ஒரு தாவர அடிப்படையிலான பர்கரை பரிசோதித்துள்ளது.

#TamilSchoolmychoice

சோயா போன்ற மாற்றீடுகள் நீண்ட காலமாக இருந்தன, ஆனால் புதிய நிறுவனங்கள் ‘பியண்ட் மீட்’ மற்றும் ‘இம்பாசிபிள் பர்கர்’ ( Impossible Burger) போன்றவை சுவை, அமைப்பு மற்றும் வண்ணத்தில் இறைச்சியை ஒத்திருக்கும் தயாரிப்புகளை உருவாக்கியுள்ளன.

புதிய பர்கர் உணவுகள் மெக்டொனால்ட்ஸ்க்காக மட்டுமே தயாரிக்கப்படும், மேலும் அடுத்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படும்.