Home One Line P1 கிளந்தானில் ஏற்பட்டுள்ள தொற்றுத் திரள் வேகமாகப் பரவக்கூடியது

கிளந்தானில் ஏற்பட்டுள்ள தொற்றுத் திரள் வேகமாகப் பரவக்கூடியது

515
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கிளந்தானில் அமல்படுத்தப்பட்ட நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு, மேலும், அம்மாநிலத்தில் பரவும் தொற்றின் போக்கு குறித்து அதிகாரிகள் கவலை கொண்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, மெங்க்கெட்டில் தொற்றுக் குழுவில் இதுவரை மூன்று புதிய சம்பவங்கள் உட்பட 45 சம்பவங்களை பதிவு செய்துள்ளது.

“எங்கள் கவலை இப்போது மெங்க்கெட்டில் தொற்றுத் திரளிடம் உள்ளது, ஏனெனில், ஒரு குறுகிய காலத்தில், இது கிளந்தானில் பல மாவட்டங்களுக்கு பரவியுள்ளது, மேலும் திரெங்கானுவில் உள்ள பெசுட் மாவட்டத்திற்கு பரவியுள்ளது.

#TamilSchoolmychoice

“எனவே, நாங்கள் செயலூக்கமான மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தோம்,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

கோத்தா பாரு, மச்சாங், தானா மேரா, கோலா கிராய், மற்றும் பாசீர் மாஸ் ஆகியவை மெங்கெட்டில் தொற்றுத் திரளால் பாதிக்கப்பட்டுள்ள ஐந்து மாவட்டங்கள் ஆகும்.

மூன்று நாட்களுக்கு முன்பு (நவம்பர் 17) இந்த தொற்றுத் திரள் குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டது.

மெங்கெட்டிலைத் தவிர, அம்மாநிலத்தில் மேலும் ஆறு தொற்றுத் திரள்கள் உள்ளன, அதாவது இக்திசாஸ், செர்காஸ், குபே, கயா, சிமேரா மற்றும் ஜாலான் மேரு தொற்று குழுக்கள் உள்ளன.