Home One Line P1 15-வது பொதுத் தேர்தலில் அம்னோ-பாஸ் சொந்த சின்னத்தில் போட்டியிடும்

15-வது பொதுத் தேர்தலில் அம்னோ-பாஸ் சொந்த சின்னத்தில் போட்டியிடும்

472
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அம்னோவும், பாஸ் கட்சியும் 15-வது பொதுத் தேர்தலில் தங்கள் சொந்த சின்னங்களைப் பயன்படுத்தி போட்டியிட ஒப்புக் கொண்டுள்ளன.

இந்த ஒப்பந்தத்தின் மூலமாக, அவர்கள் எந்தவொரு தொகுதியிலும் ஒருவருக்கொருவர் மோதாத சூழலுக்கு வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது.

நேற்றிரவு வெளியிடப்பட்ட ஒரு நேர்காணலில் பேசிய அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி, வெளி மற்றும் உள் அச்சுறுத்தல்களுக்கு ​​எதிரான கூட்டணியை வலுப்படுத்த இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.

#TamilSchoolmychoice

“நம்முடைய இந்த கூட்டணியால், உம்மாவின் இந்த வலிமையால், தாங்கள் பலவீனமடைந்துவிட்டதாக உணருபவர்கள் நிச்சயமாக இருக்கிறார்கள். அரசியல் நிலையானது அல்ல. அது மிகவும் ஆற்றல் வாய்ந்த விஷயம். இந்த கூட்டணியை அழிக்க சிலர் நிச்சயமாக தந்திரோபாயங்கள், வழிகள் மற்றும் உத்திகளைப் பயன்படுத்துகிறார்கள். வெளியில் இருந்து வரும் முயற்சிகள் மட்டுமல்ல, நம்மை உள்ளே இருந்து பிரிப்பதற்கான முயற்சிகளும் உள்ளன, ” என்று அவர் யார் அவ்வாறு செய்கிறார்கள் என பெயர்களைக் குறிப்பிடவில்லை.

கடந்த வாரம் நடந்த சந்திப்புக் கூட்டத்தில் ஓர் அரசியல் நிறுவனமாக பதிவு செய்ய முவசபாகாட் நேஷனல் முடிவு செய்ததாக சாஹிட் கூறினார்.

இரு கட்சிகளும் பிரச்சாரம் செய்யும் போது தங்கள் தேர்தல் இயந்திரங்கள்  ஒன்றாக வேலை செய்யவும் ஒப்புக் கொண்டுள்ளன.

“விரைவில் ஒரு பொதுத் தேர்தல் நடந்தாலோ அல்லது தவணை முடிந்து நடந்தாலும், அம்னோவும், பாஸ் கட்சியும் ஒருவருக்கொருவர் மோதாது இருக்க இந்த முடிவு செய்துள்ளோம். நாங்கள் மோதாத வரை எங்கள் சொந்த சின்னங்களை நாங்கள் பயன்படுத்துவோம்,” என்று அவர் கூறினார்.