Home One Line P1 வரவு செலவு திட்டத்தை நிராகரிக்க எதிர்க்கட்சிக்கு இன்னும் வாய்ப்புள்ளது

வரவு செலவு திட்டத்தை நிராகரிக்க எதிர்க்கட்சிக்கு இன்னும் வாய்ப்புள்ளது

652
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 2021- ஆம் ஆண்டு வரவு செலவு வாக்கெடுப்பில் குழு மட்டத்தில் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க எதிர்க்கட்சிக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது என்று அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

“வரவிருக்கும் வாரங்களில் குழு மட்டத்தில் எண்ணிக்கை வாக்கெடுப்பு உட்பட உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்த இன்னும் வாய்ப்புகள் உள்ளன,” என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

வியாழக்கிழமை, தேசிய கூட்டணியின் வரவு செலவு திட்டம் குரல் வாக்களிப்பின் வழி நிறைவேற்றப்பட்டது.

#TamilSchoolmychoice

எண்ணிக்கை வாக்கெடுப்புக்கு 15 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. போக்கோக் செனா நாடாளுமன்ற உறுப்பினர் மாபுஸ் ஒமார் எண்ணிக்கை வாக்கெடுப்புக்கு முயன்றபோது, ​​13 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே ஆதரவாக நின்றனர்.

இது எதிர்க்கட்சிகளுக்கு, குறிப்பாக நம்பிக்கை கூட்டணி, தங்கள் ஆதரவாளர்களால் சமூக ஊடகங்களில் பெரும் விமர்சனத்தைப் பெற்றது.

நிதியமைச்சரின் அறிவிப்பை ஆழமாக ஆராய்வதற்கு முன்பு, எந்தவொரு எண்ணிக்கை வாக்டெடுப்பையும் நடத்த வேண்டாமென்று தாம் கேட்டுக் கொண்டதாக அன்வார் இப்ராகிம் ஓர் அறிக்கையில் கூறினார்.

“அமைச்சகங்களின் ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டு, அவை எந்தெந்த விசயங்களுக்கு பயன்படுத்தப்படும் என்பதை தெரிந்து கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிமை உண்டு. வாடகை கார் ஓட்டுநர்கள், சிற்றுண்டி நடத்துனர்கள் போன்றோருக்கான உதவிகள் தேவை. ஈபிஎப் மற்றும் கடன் தள்ளுபடி ஆகியவற்றிலிருந்து நிதி திரும்பப் பெறுதல் உள்ளிட்ட பல வழிமுறைகளும் ஆராயப்பட வேண்டும்,” என்று அன்வார் கூறினார்.

மலேசிய நாடாளுமன்ற வரலாற்றில், மலேசியாவில் நடந்ததைப் போல வரவு செலவு திட்டம் ஒருபோதும் திருத்தம் செய்யப்படவில்லை என்றும் அன்வார் கூறினார்.