கோலாலம்பூர்: உள்ளூர் திரையரங்கு நிறுவனமான கோல்டன் ஸ்கிரீன் சினிமாஸ் (ஜி.எஸ்.சி) நாட்டின் மூன்றாவது பெரிய திரையரங்கு நிறுவனமான எம்பிஓ சினிமாஸ் சொத்துகளை வாங்குவதாக அறிவித்துள்ளது.
ஜி.எஸ்.சி திரையரங்கை பிபிபி குழுமம் கொண்டுள்ளது.
ஜி.எஸ்.சி தலைமை நிர்வாக அதிகாரி கோ மீ லீ கூறுகையில், பிபிபி குழுமம் சினிமா துறையின் வளர்ச்சியடையும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும், தொற்றுநோய் கடந்தபின்னர் தொழில்துறையின் மறுமலர்ச்சி குறித்து நம்பிக்கையுடன் இருப்பதாகவும் கூறினார்.
“எம்பிஓ சினிமாஸின் சொத்துக்களை வாங்குவதும், தடுப்பூசி வழங்கப்படுவதும் இந்த தொற்றுநோயிலிருந்து மீள்வதை துரிதப்படுத்த உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தம் ஜூன் இறுதிக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கோ மேலும் கூறினார்.
எம்பிஓ நாடு முழுவதும் 27 இடங்களில் திரையரங்குகளைக் கொண்டுள்ளது. ஆனால் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது நான்கு இடங்களில் மட்டுமே திறக்கப்பட்டன.