Home One Line P1 தடுப்பூசி தொடர்பான 200 புகார்கள் தீர்க்கப்பட்டுள்ளன

தடுப்பூசி தொடர்பான 200 புகார்கள் தீர்க்கப்பட்டுள்ளன

471
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட் -19 தடுப்பூசி திட்டம் தொடர்பாக 200- க்கும் மேற்பட்ட புகார்களைப் பெற்றதாக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.

அனைத்து வழக்குகளும் விசாரிக்கப்பட்டு தீர்க்கப்பட்டுள்ளன என்று கைரி விளக்கினார்.

“நாங்கள் ஒவ்வொரு அறிக்கையையும் சரிபார்த்துள்ளோம். சிலவற்றில் எந்த ஆதாரமும் இல்லை, சிலவற்றில் ஆதாரங்களும் உள்ளன. ஆனால் அனைத்தும் தீர்க்கப்பட்டுள்ளன,” என்று கைரி இன்று சுகாதார அமைச்சர் டாக்டர் அடாம் பாபாவுடன் ஒரு கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

#TamilSchoolmychoice

முதல் கட்ட தடுப்பூசி திட்டத்தில் தடுப்பூசிகளைப் பெறுபவர்களின் முன்னணி பணியாளர்கள் வரிசையில் அவசர சிகிச்சை பிரிவைச் சேர்ந்த மருத்துவ அதிகாரிகள் சேர்க்கப்படாத ஒரு மருத்துவமனையில் இந்த வழக்கு புகார்களில் ஒன்று என்று கைரி கூறினார்.

இந்த விவகாரம் சரிசெய்யப்பட்டு, அவசர சிகிச்சை பிரிவைச் சேர்ந்த ஊழியர்கள் இந்த மாதத்தில் தடுப்பூசிகளைப் பெற திட்டமிடப்பட்டுள்ளார்கள் என்றார்.

முன்னதாக, கொவிட் -19 தடுப்பூசிக்கான வரிசைகளை மீற முயற்சித்ததாகக் கூறப்படும் புகார்கள் குறித்து தகவலறிந்தவர்களை முன் வருமாறு கைரி கேட்டுக்கொண்டார்.