Home One Line P2 குஷ்பூவுக்கு ஆதரவாக ஸ்மிருதி இராணி பரப்புரை

குஷ்பூவுக்கு ஆதரவாக ஸ்மிருதி இராணி பரப்புரை

654
0
SHARE
Ad

சென்னை : தமிழக சட்டமன்றத் தேர்தல்களுக்கான வாக்களிப்பு நாள் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் மத்திய அமைச்சர்களும் தேசிய நிலையிலான தலைவர்களும் தமிழ் நாட்டை முற்றுகையிட்டு தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சேலத்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் தலைவர் திமுக தலைவர் ஸ்டாலினுடன் கலந்து கொண்டார்.

சென்னை வந்த மத்திய பாஜக அமைச்சர் ஸ்மிருதி இராணி ஆயிரம் விளக்குத் தொகுதியில் போட்டியிடும் சென்னையில் ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளர் குஷ்புவுக்கும் துறைமுகம் தொகுதி பாஜக வேட்பாளர் வினோஜ்ஜூக்கும் ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

#TamilSchoolmychoice

அடுத்த சில நாட்களில் மத்திய அமைச்சர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரும் தமிழ் நாட்டில் பிரச்சாரம் மேற்கொள்வர் என அறிவிக்கப்பட்டுள்ளது.