Home நாடு கணபதி மரணம்: காணொலி வெளியிட்டதற்கு சைட் சாதிக் மீது விசாரணை

கணபதி மரணம்: காணொலி வெளியிட்டதற்கு சைட் சாதிக் மீது விசாரணை

601
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சமீபத்தில் தடுப்புக் காவலில் இருந்த போது மரணமடைந்த கணபதி தொடர்பாக காணொலி வெளியிட்டதற்கு முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சைட் சாதிக்கை காவல் துறை விசாரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நேற்று தனக்கு தகவல் கிடைத்ததாகவும், தனது முழு ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்ததாகவும் சைட் சாதிக் கூறினார்.

தடுப்புக் காவலில் இருந்தபோது பால் வர்த்தகர் கணபதி இறந்ததைத் தொடர்ந்து ஏப்ரல் 28- ஆம் தேதி சைட் சாதிக் வெளியிட்ட 45 விநாடி காணொலியில் முவார் நாடாளுமன்ற உறுப்பினர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக அறியப்படுகிறது.

#TamilSchoolmychoice

அந்தக் காணொலியில், காவ்ல் துறையினரின் மிருகத்தனம் ஒரு தீவிரமான பிரச்சனை என்று சைச் சாதிக் கூறினார். அத்தகைய விதி மற்றவர்களுக்கு ஏற்படக்கூடும் என்றால், “அது எங்களுக்கும் நிகழக்கூடும்” என்று அவர் கூறியிருந்தார்.

காவல் துறை புகார்கள் மற்றும் தவறான நடத்தை ஆணையம் (ஐபிசிஎம்சி) அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்திருந்தார்.