Home நாடு ஜூன் 1 முதல் அனைத்துலக வணிக, தொழில்துறை அமைச்சக கடிதத்திற்கு அனுமதி இல்லை

ஜூன் 1 முதல் அனைத்துலக வணிக, தொழில்துறை அமைச்சக கடிதத்திற்கு அனுமதி இல்லை

510
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஜூன் 1 முதல் 14 வரை நடைமுறைக்கு வரும் முழு நடமாட்டக் கட்டுப்பாட்டின் முதல் கட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் அனைத்துலக வணிக மற்றும் தொழில்துறை அமைச்சகம் வழங்கிய பணிக்கான பயண அனுமதி கடிதம் இரத்து செய்யப்படும்.

இனிமேல், பயண அனுமதி கடிதம் சம்பந்தப்பட்ட அமைச்சகத்திடமிருந்து பெறப்பட வேண்டும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

“அவர்கள் விவசாயத்தில் பணிபுரிந்தால், அவர்கள் வேளாண்மை மற்றும் உணவுத் துறை அமைச்சகத்திடம் விண்ணப்பிக்க வேண்டும்,” என்று அவர் நடமாட்டக் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்து செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.