Home இந்தியா இந்தியா: ஜூலையில் 10 மில்லியன் தடுப்பூசிகள் கிடைக்கக்கூடும்

இந்தியா: ஜூலையில் 10 மில்லியன் தடுப்பூசிகள் கிடைக்கக்கூடும்

518
0
SHARE
Ad

புது டில்லி: ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் இந்தியாவில் தினசரி 10 மில்லியன் கொவிட் -19 தடுப்பூசி கிடைக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மூன்று மில்லியன் மட்டுமே கிடைக்கப்படுகிறது.

நாட்டின் தடுப்பூசி திட்டத்தை நிர்வகிப்பதில் பற்றாக்குறை குறித்த கவலைகளைத் தீர்க்கும் முயற்சியில் இந்திய அரசாங்கம் இந்த உத்தரவாதத்தை வழங்கி உள்ளது.

உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில் ஏப்ரல் மாதத்திலிருந்து கடுமையான தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இதனை தீர்க்க ஒரே வழி அதன் 1.3 பில்லியன் மக்களுக்கு பெருமளவில் தடுப்பூசி போடுவதுதான் என்று சுகாதார வல்லுநர்கள் வாதிடுகின்றனர்.

தடுப்பூசி உற்பத்தியாளர்களான இந்தியன் சீரம் இன்ஸ்டிடியூட் மற்றும் பாரத் பயோடெக் ஆகியவை விநியோகத்தை அதிகரிக்க செயல்படுகின்றன. பிபைசர் போன்ற முக்கிய வெளிநாட்டு தடுப்பூசி உற்பத்தியாளர்களுடனும் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

கிட்டத்தட்ட 45 மில்லியன் மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.