Home நாடு மாநில அரசுகள் தடுப்பூசிகள் வாங்குவதை மத்திய அரசு தடுக்காது

மாநில அரசுகள் தடுப்பூசிகள் வாங்குவதை மத்திய அரசு தடுக்காது

686
0
SHARE
Ad

கோலாலம்பூர்: எந்தவொரு தரப்பும் அல்லது மாநில அரசும் சொந்தமாக தடுப்பூசிகளை வாங்குவதை மத்திய அரசு தடுக்கவில்லை.

தேசிய மருந்து ஒழுங்குமுறை நிறுவனம் (என்.பி.ஆர்.ஏ) ஒப்புதல் அளித்த எந்தவொரு தடுப்பூசியையும் கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று தேசிய கொவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.

இதுவரை, மூன்று தடுப்பூசிகளை மட்டுமே சுகாதார அமைச்சகம் பயன்படுத்துகிறது, அதாவது பிபைசர்-பயோஎன்டெக், அஸ்ட்ராசெனெகா மற்றும் சினோவாக் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.

#TamilSchoolmychoice

அவர்கள் தற்போதுள்ள தடுப்பூசியை வாங்க விரும்பினால், அந்த தடுப்பூசி மற்றவர்களால் வாங்கப்படுவதற்கு முன்பு மத்திய அரசுக்கு வழங்கப்படுவதை அரசாங்கம் உறுதி செய்யும் என்று கைரி கூறினார்.

“மாநில அரசு மற்றொரு தடுப்பூசி வாங்க விரும்பினால், எங்களுக்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை, ஆனால், சினோவாக் வாங்க விரும்பினால், முதலில் மத்திய அரசுக்கு வழங்க வேண்டும்,” என்று கைரி கூறினார்.