Home நாடு மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவம்- காவல் துறையில் புகார்

மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவம்- காவல் துறையில் புகார்

635
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட் -19 நோயாளிகள் தொடர்பான இரண்டு வன்முறை சம்பவங்கள் தொடர்பாக துவாங்கு அம்புவான் ரஹிமா கிள்ளான் மருத்துவமனை காவல் துறையில் புகார் அளித்துள்ளது.

ஜூன் 6-ஆம் தேதி நடந்ததாகக் கூறப்படும் முதல் சம்பவத்தில், மருத்துவமனையில் இறந்த ஒரு நோயாளியின் மகன் கடமையில் இருந்த ஒரு மருத்துவரை குத்தியதாகக் கூறப்படுகிறது.

மூன்று நாட்களுக்குப் பிறகு, ஜூன் 9-ஆம் தேதி, கொவிட் -19 நோயாளி மற்றொரு நோயாளியை கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

நோயாளிக்கு மனநோய்களின் வரலாறு இல்லை என்பதை மலேசியாகினி குறிப்பிட்டுள்ளது. ஆனால் கொவிட் -19 காரணமாக நோயாளி பிரமைகளை அனுபவிக்கக்கூடும் என்றும், இது நச்சுயிரியால் பாதிக்கப்பட்ட சில நோயாளிகளுக்கு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

தெற்கு கிள்ளான் மாவட்ட காவல்துறைத் தலைவர் சம்சுல் அமர் ராமில் கூறுகையில், மருத்துவமனை நிர்வாகத்திடமிருந்து காவல் துறைக்கு இரண்டு புகார்கள் கிடைத்ததாக உறுதிப்படுத்தினார்.

“இந்த வழக்குகள் தொடர்பான புகார்கள் எங்களுக்கு வந்துள்ளன என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும்,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

எவ்வாறாயினும், இது குறித்து மேலதிக விபரங்களை வழங்க ஷம்சுல் மறுத்துவிட்டார்.