புது டில்லி: இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம், தங்களின் கொவிட்-19 தடுப்பூசி உற்பத்தி தொழில்நுட்பத்தை நான்கு நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ள பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறியுள்ளது.
உற்பத்தி விரைவில் துவங்கப்படும். இந்திய அரசு மேலும் மூன்று நிறுவனங்களை அறிமுகம் செய்துள்ளதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
மாதம் ஒன்றுக்கு 25 மில்லியன் கோவாக்ஸின் தடுப்பூசிகளை பாரத் பயோடெக் உற்பத்தி செய்து வருகிறது.
குஜராத்தின் அங்கலேஷ்வர் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்நிறுவனத்தின் மற்றொரு தடுப்பூசி உற்பத்தி மையமும் விரைவில் தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபட உள்ளது.