கோலாலம்பூர்: கொவிட் -19 நோய்த்தொற்றைச் சமாளிக்க இப்போது போதுமான வசதிகள் இருப்பதாகக் கூறி, கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முழு ஊரடங்கை விதிக்காததன் நிலைப்பாட்டை அரசாங்கம் தற்காத்துள்ளது.
சம்பவங்கள் ஒரு நாளைக்கு சுமார் 100 முதல் 200 வரை மட்டுமே இருந்தபோதிலும், கடந்த ஆண்டு மார்ச் முதல் மே வரை முழு ஊரடங்கு தேவைப்பட்டது என்று தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் சைபுடின் அப்துல்லா தெரிவித்தார்.
“ஏன் இப்போது இல்லை என்று சிலர் கேட்கிறார்கள்? (ஏனென்றால்) சூழல் மாறிவிட்டது, ”என்று அவர் கூறினார்.
“அந்த நேரத்தில் , நம்மிடம் போதுமான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் வென்டிலேட்டர்கள் இல்லை. தடுப்பூசிகள் எதுவும் இல்லை,” என்று அவர் இன்று ஒரு மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
கடந்த ஆண்டு முழு ஊரடங்கை செயல்படுத்துவதைத் தவிர புத்ராஜெயாவுக்கு வேறு வழியில்லை என்று அவர் கூறினார்.
ஆனால் இப்போது, பொருளாதார பேரழிவைத் தவிர்க்க வாழ்க்கையையும் வாழ்வாதாரங்களையும் சமநிலைப்படுத்துவதை அரசாங்கம் கவனித்து வருகிறது என்றார்.