Home உலகம் ஈரோ 2020 : சுவீடன் 3 – போலந்து 2; சுவீடன் 16 குழுக்களுக்குள் முன்னேறியது

ஈரோ 2020 : சுவீடன் 3 – போலந்து 2; சுவீடன் 16 குழுக்களுக்குள் முன்னேறியது

1570
0
SHARE
Ad

செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் : ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் புதன்கிழமை (ஜூன் 23) நள்ளிரவு 12.00 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் குரூப் “இ” பிரிவில் சுவீடனும், போலந்தும் களமிறங்கின.

இரஷியாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் இந்த ஆட்டம் நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் சுவீடன் 3-2 என்ற கோல் எண்ணிக்கையில் போலந்தைத் தோற்கடித்தது. அடுத்த சுற்றுக்குத் தேர்வாகும் 16 குழுக்களில் ஒன்றாகவும் சுவீடன் திகழ்கிறது.

#TamilSchoolmychoice

இந்த வெற்றியின் மூலம் 7 புள்ளிகளுடன் “இ” (E) பிரிவில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது சுவீடன்.

போலந்து ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளில் இருந்து வெளியேறுகிறது

புதன்கிழமை (ஜூன் 23) நடைபெற்ற (மலேசிய நேரப்படி இன்று வியாழக்கிழமை ஜூன் 24 அதிகாலை) மற்ற ஆட்டங்களின்  முடிவுகள்: