Home நாடு கொவிட் தடுப்பூசிகள் – மொத்த எண்ணிக்கை 12 மில்லியனைக் கடந்தது – ஒரு நாளில் 424,541...

கொவிட் தடுப்பூசிகள் – மொத்த எண்ணிக்கை 12 மில்லியனைக் கடந்தது – ஒரு நாளில் 424,541 தடுப்பூசிகள்!

804
0
SHARE
Ad

கோலாலம்பூர் :நாடு முழுமையிலும் கொவிட் தொற்றுகளின் பரவல் நேற்று ஒருநாளில் 11 ஆயிரத்தைக் கடந்து அதிர்ச்சி அளித்திருக்கும் நெருடலான செய்திக்கிடையில், கொவிட் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு வருகின்றன.

நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 13) நள்ளிரவு வரையில் 424,541 அளவைகள் கொண்ட தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டன.

நேற்று வரையில் நாடு முழுமையிலும் செலுத்தப்பட்ட மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை 12 மில்லியனைத் தாண்டியது. இதுவரை செலுத்தப்பட்டிருக்கும் கொவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 12,212,730 என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

நேற்று நள்ளிரவு வரையில் ஒருநாளில் செலுத்தப்பட்ட 424,541 தடுப்பூசிகளில்   260,286 முதல் தடவை போடப்பட்ட தடுப்பூசிகளாகும். எஞ்சிய 164,255 அளவைகள் கொண்ட தடுப்பூசிகள் இரண்டாவது தடவையாகச் செலுத்தப்பட்டவையாகும்.

மாநிலங்களைப் பொறுத்தவரை கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கையைப் போன்றே தடுப்பூசிகள் செலுத்துவதிலும் சிலாங்கூர் முதல் மாநிலமாக இருக்கிறது.

சிலாங்கூர், கோலாலம்பூர், இணைந்த 2 மாநிலங்களில் இதுவரையில் 3 மில்லியனுக்கும் மேற்பட்ட முதல் தடுப்பூசிகள் போடப்பட்டு இருக்கின்றன.

நேற்று வரையில் செலுத்தப்பட்ட 12,212,730 தடுப்பூசிகளில் 8,364,354 முதல் தடுப்பூசிகளாகும்.

எஞ்சிய 3,848,376 தடுப்பூசிகள் இரண்டாவது தடவையாகச் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளாகும்.

நாடு முழுமையிலும் கொவிட் தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஜூலை மாதத்திற்குள் மேலும் 12 மில்லியன் அளவைகள் கொண்ட தடுப்பூசிகள் கூடுதலாக மலேசியாவுக்குள் வந்தடையும் என கொவிட் தடுப்பூசித் திட்டத்திற்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் அறிவித்திருக்கிறார்.

பிரதமர் மொகிதின் யாசினும் இந்த ஜூலை மாதம் இறுதிக்குள் கொவிட் தடுப்பூசிகள் மேலும் 2 மில்லியன் என்ற எண்ணிக்கையில் நாட்டை வந்தடையும் எனத் தெரிவித்திருக்கிறார். இவை கிள்ளான் பள்ளத்தாக்கிலும், நெகிரி செம்பிலான் மாநிலத்திற்கும் விநியோகிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.