நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 13) நள்ளிரவு வரையில் 424,541 அளவைகள் கொண்ட தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டன.
நேற்று வரையில் நாடு முழுமையிலும் செலுத்தப்பட்ட மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை 12 மில்லியனைத் தாண்டியது. இதுவரை செலுத்தப்பட்டிருக்கும் கொவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 12,212,730 என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நேற்று நள்ளிரவு வரையில் ஒருநாளில் செலுத்தப்பட்ட 424,541 தடுப்பூசிகளில் 260,286 முதல் தடவை போடப்பட்ட தடுப்பூசிகளாகும். எஞ்சிய 164,255 அளவைகள் கொண்ட தடுப்பூசிகள் இரண்டாவது தடவையாகச் செலுத்தப்பட்டவையாகும்.
சிலாங்கூர், கோலாலம்பூர், இணைந்த 2 மாநிலங்களில் இதுவரையில் 3 மில்லியனுக்கும் மேற்பட்ட முதல் தடுப்பூசிகள் போடப்பட்டு இருக்கின்றன.
நேற்று வரையில் செலுத்தப்பட்ட 12,212,730 தடுப்பூசிகளில் 8,364,354 முதல் தடுப்பூசிகளாகும்.
எஞ்சிய 3,848,376 தடுப்பூசிகள் இரண்டாவது தடவையாகச் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளாகும்.
நாடு முழுமையிலும் கொவிட் தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஜூலை மாதத்திற்குள் மேலும் 12 மில்லியன் அளவைகள் கொண்ட தடுப்பூசிகள் கூடுதலாக மலேசியாவுக்குள் வந்தடையும் என கொவிட் தடுப்பூசித் திட்டத்திற்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் அறிவித்திருக்கிறார்.