Home நாடு மொகிதின் யாசினுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் அனுமதிக்கப்படாது

மொகிதின் யாசினுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் அனுமதிக்கப்படாது

796
0
SHARE
Ad

கோலாலம்பூர் : எதிர்வரும் ஜூலை 26ஆம் தேதி மலேசிய நாடாளுமன்றம் கூடவிருக்கின்றது. அந்த 5 நாள் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் கொவிட்-19 தொடர்பான வாதங்களை மட்டுமே உள்ளடக்கியிருக்கும் என்றும் மற்றபடி பிரதமர் மொகிதின் யாசின் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும் முயற்சிகளுக்குத் தடை விதிக்கப்படும் என்றும் நாடாளுமன்ற மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ ராயஸ் யாத்திம் தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையில், நேற்று (புதன்கிழமை ஜூலை 15) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் அனைத்து அமைச்சர்களும் பிரதமர் மொகிதின் யாசினுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

அம்னோவின் 9 அமைச்சர்களும் இதில் கையெழுத்திட்டுள்ளனர். இதிலிருந்து முதல் கட்டமாக அம்னோவின் 9 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை மொகிதின் யாசின் பெற்றுள்ளார் என்பதும் தெளிவாகியுள்ளது.

#TamilSchoolmychoice

இதுகுறித்துக் கருத்துரைத்த அம்னோ தலைமைச் செயலாளர் அகமட் மஸ்லான், அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் உச்சமன்றத்தின் முடிவைப் பின்பற்ற வேண்டும் என எச்சரித்துள்ளார்.

பொந்தியான் நாடாளுமன்ற உறுப்பினருமான அகமட் மஸ்லான், கட்சியின் ஆதரவின்றி யாரும் பொதுத் தேர்தலில் நின்று வெற்றி பெற்று விட முடியாது என்றும் தான் பொந்தியான் தொகுதியில் வெற்றி பெற்றதற்கும் அம்னோவின் ஆதரவே காரணம் என்றும் கூறினார்.