Home நாடு மாமன்னரைச் சந்திக்க அசிசான் ஹாருண் – ராய்ஸ் யாத்திம் அரண்மனை வந்தனர்

மாமன்னரைச் சந்திக்க அசிசான் ஹாருண் – ராய்ஸ் யாத்திம் அரண்மனை வந்தனர்

913
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நாட்டில் அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் அரசியல் திருப்பங்களின் ஒரு பகுதியாக, நாடாளுமன்ற அவைத் தலைவர் அசிசான் ஹாருணையும், நாடாளுமன்ற மேலவைத் தலைவர் ராய்ஸ் யாத்திமையும் தன்னை வந்து சந்திக்குமாறு மாமன்னர் பணித்திருந்தார்.

அதற்கேற்ப அவர்கள் இருவரும் தற்போது அரண்மனையை வந்தடைந்தனர். காலை 11.00 மணியளவில் அவர்களின் வாகனங்கள் அரண்மனைக்குள் நுழைவது காணப்பட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவர்களோடு நாடாளுமன்ற அவையின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அசாலினா ஓத்மான், டத்தோ முகமட் ரஷிட் ஹாஸ்னோன் ஆகியோரும் நாடாளுமன்ற மேலவையின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் அலி முகமட்டும் இணைந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என அதிரடியாக அறிக்கை விடுத்த மாமன்னர், இன்று அவர்களைச் சந்தித்து நாடாளுமன்றம் எப்போது கூட்டப்படும் என்பது போன்ற விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிது.

நேரடியாக அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு ஏற்ப மாமன்னர் நாடாளுமன்றம் கூட உத்தரவிடுவாரா என்ற எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரங்களில் நிலவுகிறது.

எனினும், சட்டத் துறைத் தலைவர் இட்ருஸ் விடுத்த அறிக்கை ஒன்றில் நாடாளுமன்றம் எப்போது கூட்டப்பட வேண்டும் என்பதை அமைச்சரவை மட்டுமே நிர்ணயிக்க முடியும் எனக் கூறியிருந்தார்.

ஜனவரி மாதத்தில் கொவிட்-19 தொடர்பாக அவசர கால சட்டம் பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்போதிருந்து நாடாளுமன்றம் இன்னும் கூட்டப்படவில்லை.