Home நாடு அம்னோவின் 9 அமைச்சர்களும் மொகிதினுக்கு ஆதரவு

அம்னோவின் 9 அமைச்சர்களும் மொகிதினுக்கு ஆதரவு

797
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : மொகிதின் யாசின் தலைமையிலான தேசியக் கூட்டணி அரசாங்கத்திற்கு ஆதரவில்லை என அம்னோ உச்சமன்றம் கடந்த ஜூலை 7-ஆம் தேதி அறிவித்த பின்னரும் கூட, அந்தக் கட்சியின் 9 அமைச்சர்களும் தொடர்ந்து மொகிதினுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை ஒன்றை இன்று (புதன்கிழமை ஜூலை 14) விடுத்தனர்.

இன்று நடைபெற்ற மொகிதின் யாசினின் அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து அமைச்சர்களும் மொகிதினுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை ஒன்றை கையெழுத்திட்டு வெளியிட்டனர்.

அதில் கையெழுத்திட்டிருக்கும் அமைச்சர்களில் அம்னோவின் 9 அமைச்சர்களும் அடங்குவர். அந்த அமைச்சர்கள் பின்வருமாறு:

  • இஸ்மாயில் சாப்ரி (தற்காப்பு அமைச்சர், துணைப் பிரதமர்)
  • அனுவார் மூசா – கூட்டரசுப் பிரதேச அமைச்சர்
  • ஷாம்சுல் அனுவார் நசரா –  எரிசக்தி, இயற்கை வளங்கள் அமைச்சர்
  • நோராய்னி அகமட் – உயர் கல்வி அமைச்சர்
  • ரீசால் மரிக்கான் – இளைஞர் விளையாட்டுத் துறை
  • ஹிஷாமுடின் ஹூசேன் ஓன் – வெளியுறவு அமைச்சு
  • கைரி ஜமாலுடின் – அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கம் அமைச்சர்
  • ஹாலிமா முகமட் சாதிக் – தேசிய ஒற்றுமைத் துறை அமைச்சு
  • டாக்டர் அடாம் பாபா – சுகாதார அமைச்சு
#TamilSchoolmychoice

மேற்கண்ட 9 அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களுமாவர். இதன் காரணமாக, மொகிதின் முதல் கட்டமாக அம்னோவின் 9 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றிருக்கிறார் என்பது தெளிவாகியிருக்கிறது.

இதைத் தொடர்ந்து மேற்கண்ட 9 அமைச்சர்கள் மீதும் அம்னோ நடவடிக்கை ஏதும் எடுக்குமா என்பது இனிமேல்தான் தெரியவரும்.