Home நாடு கொவிட்-19: மரணங்கள் 153 ஆக உயர்ந்தன – சிகிச்சை பெறுவோர் 124,593!

கொவிட்-19: மரணங்கள் 153 ஆக உயர்ந்தன – சிகிச்சை பெறுவோர் 124,593!

2420
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று ஞாயிற்றுக்கிழமை ஜூலை 18 வரையிலான ஒரு நாளில் நாடு முழுமையிலும் கொவிட் தொற்று மரணங்கள் 153 ஆக உயர்ந்திருக்கின்றன. நேற்று ஒருநாளில் 138 ஆக இருந்த மரணங்கள் இன்று அதிகரித்தன.

கொவிட் தொற்று தொடங்கியதில் இருந்து கடந்த சில நாட்களாக ஒருநாள் மரண எண்ணிக்கைகள் நூற்றுக்கும் அதிகமானதாக இருந்து வருகின்றன.

அதே வேளையில் தொற்று பீடித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து இன்று 124,593 ஆக உயர்ந்தது.

#TamilSchoolmychoice

மேலும் 909 பேர் நாடு முழுவதிலும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 445 பேர் சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்றைய ஒருநாள் மரணங்களைத் தொடர்ந்து நாட்டில் பதிவாகியிருக்கும் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 7,019 ஆக உயர்ந்தது.

ஒருநாள் தொற்றுகளின் எண்ணிக்கை 10,710

இன்றைய ஒருநாள் தொற்றுகளின் எண்ணிக்கையான 10,710 -ஐ சேர்த்து நாட்டில் இதுவரை பதிவான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 916,561 ஆக உயர்ந்திருக்கிறது.

மொத்தம் பதிவான 10,710 தொற்று சம்பவங்களில் 10,698 தொற்றுகள் உள்நாட்டிலேயே பரவியதாகும். 12 தொற்றுகள் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களால் பரவியதாகும்.

கொவிட் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை ஒரு நாளில் 5,778- ஆக பதிவாகி உள்ளது. இதைத் தொடர்ந்து இதுவரையில் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 784,949 -ஆக உயர்ந்திருக்கிறது.

இன்றைய எண்ணிக்கை குறைந்திருந்தாலும் கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அளவில் தொற்றுகள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன.

இன்றைய எண்ணிக்கையோடு சேர்ந்து நாட்டில் இதுவரை பதிவான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 916,561 ஆக உயர்ந்திருக்கிறது.

மாநிலங்களைப் பொறுத்தவரையில் முதல் இடத்தில் வழக்கம்போல் சிலாங்கூர் இருக்கிறது. 4,828 தொற்றுகளை சிலாங்கூர் பதிவு செய்திருக்கிறது.

சிலாங்கூருக்கு அடுத்த நிலையில் 945 தொற்றுகளோடு கோலாலம்பூர் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

808 தொற்றுகளோடு வழக்கத்திற்கு மாறாக ஜோகூர் 3-வது இடத்தில் இருக்கிறது.

நெகிரி செம்பிலான் 771 தொற்றுகளோடு 4-வது  இடத்தில் இருக்கிறது.