Home நாடு 12-வது மலேசியத் திட்டம் – இந்தியர்களுக்கு கிடைக்கப் போவது என்ன?

12-வது மலேசியத் திட்டம் – இந்தியர்களுக்கு கிடைக்கப் போவது என்ன?

632
0
SHARE
Ad

கோலாலம்பூர் : எதிர்வரும் செப்டம்பர் 27-ஆம் தேதி 12-வது மலேசியத் திட்டத்தைப் பிரதமர் இஸ்மாயில் சாப்ரி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பார் என அமைச்சர் முஸ்தாபா முகமட் அண்மையில் அறிவித்துள்ளார்.

முஸ்தாபா முகமட் பிரதமர் துறையின் பொருளாதாரப் பிரிவுக்கான அமைச்சராவார்.

மாநிலங்களுக்கிடையிலான வளர்ச்சி வித்தியாசத்தைக் குறைப்பதும், பி40, எம்40, டி20 பிரிவினர்களுக்கிடையிலான வருமான வரி வித்தியாசத்தைக் குறைப்பதும் 12-வது மலேசியத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகத் திகழும்.

#TamilSchoolmychoice

பி-40 (B-40) என்பது குறைந்த வருமானமுடைய அடித்தட்டு மக்களில் 40 விழுக்காட்டினர். எம்-40 (M-40) என்பது நடுத்தர வருமானம் ஈட்டும் 40 விழுக்காட்டு மக்கள் தொகையினர்.

டி-20 (T-20) என்பது மிக அதிகமான வருமானத்தை ஈட்டும் மக்களில் முதல் நிலையில் இருக்கும் 20 விழுக்காட்டினர்.

12-வது மலேசியத் திட்டத்தில் இந்திய சமூகத்திற்கென சிறப்பு சலுகைகள், திட்டங்கள் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் இந்திய சமுதாயத்தில் எழுந்துள்ளது.

இதற்கிடையில் இந்திய சமூகத்தினர் 12-வது மலேசியத் திட்டத்தில் விடுபட்டிருக்கின்றனர் – எங்களைப் போன்ற இந்திய  சட்டமன்ற உறுப்பினர்களிடம் கருத்து கேட்கப்படவில்லை எனக் கூறியிருக்கிறார் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் கணபதி ராவ்.

இதைத் தொடர்ந்து 12-வது மலேசியத் திட்டத்தில் இந்திய சமூகத்திற்கென சிறப்பு சலுகைகள் கிடைக்குமா?

மிகவும் பின்தங்கியிருக்கும் அவர்களின் சமூக, பொருளாதார, கல்விப் பிரச்சனைகளுக்கு புதிய வரைவுத் திட்டங்கள் உருவாக்கப்படுமா?

என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன?


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal