Home நாடு சொக்சோ உதவித் தொகையை சரவணன் நேரில் வழங்கினார்

சொக்சோ உதவித் தொகையை சரவணன் நேரில் வழங்கினார்

870
0
SHARE
Ad

கோலாலம்பூர் : அண்மையில் விபத்தொன்றில் காலமான விஜயகுமார் என்பவரின் குடும்ப வாரிசுகளுக்கு சொக்சோ (SOCSO-பெர்கேசோ) எனப்படும் தொழிலாளர் சமூகப் பாதுகாப்பு அமைப்பு வழங்கிய உதவித் தொகையை மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் நேரில் சென்று அந்தக் குடும்பத்தினருக்கு வழங்கினார்.

சொக்சோ மனித வள அமைச்சின் கீழ் இயங்கி வருகிறது.

கடந்தாண்டு வேலையில் இருந்து வீடு திரும்பும் போது விபத்துக்குள்ளான பிறகு, தலையில் ஏற்பட்ட பாதிப்புகளின் விளைவாக உயிரிழந்த திரு.விஜயகுமாரின் மனைவி பூங்கோதைக்கும், அவரின் மகள் மற்றும் குடும்பத்தினருக்கும் சரவணன் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார்.

#TamilSchoolmychoice

“நவம்பர் 2020-இல், விஜயகுமாரின் அறுவை சிகிச்சைக்காக சொக்சோவின்  23,000 ரிங்கிட் உதவித்தொகையை வழங்கும் போது, மறைந்த விஜயகுமாரை நேரில் சந்தித்துப் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சொக்சோவின் கீழ் மீண்டும் பணிக்குச் செல்லும் திட்டத்தில், மூன்று மாதங்களுக்கு பூச்சோங் கொலம்பியா (Columbia) மருத்துவமனையில் மறுவாழ்வு திட்டத்தில் விஜயகுமார் இணைக்கப்பட்டிருந்தார். ஆனால் அது முழுமை பெறாமலேயே, விஜயகுமார் மறைய நேர்ந்தது வருத்தமளிக்கிறது” என சரவணன் தெரிவித்தார்.

சொக்சோ சார்பில் விஜயகுமாரின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட உதவிகள் பின்வருமாறு:

1. சிகிச்சை பெற்ற காலத்தில் தற்காலிக இயலாமைக்கான நன்மைகள் 17,344 ரிங்கிட்;

2. இறுதிச்சடங்கிற்கான உதவித்தொகை 2000 ரிங்கிட்.

3. வாரிசுகளுக்கான மாதாந்திர உதவித் தொகை 2,232 ரிங்கிட்

“மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் சொக்சோவின் வழி இந்த அனைத்து நன்மைகளையும் முறையே விஜயகுமார் குடும்பத்தினர் பெற்றுள்ளனர் என்பதில் திருப்தி. மலேசியக் குடும்பம் என்ற வகையில் மனிதவள அமைச்சு பணியிட விபத்துகளால் பாதிக்கப்பட்ட மலேசியர்களுக்கு உரிய உதவி மற்றும் பாதுகாப்புகளை வழங்க எப்போதும் கடமைப்பட்டுள்ளது” என்றும் சரவணன் குறிப்பிட்டார்.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal