Home நாடு சுல்கிப்ளி நோர்டினை இந்தியர்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்களாம் – நஜிப் கூறுகிறார்

சுல்கிப்ளி நோர்டினை இந்தியர்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்களாம் – நஜிப் கூறுகிறார்

664
0
SHARE
Ad

Zulkifli-Nordin-featureகோலாலம்பூர், ஏப்ரல் 23- சுல்கிப்ளி நோர்டினை இந்தியர்கள் மன்னித்து விட்டனர் என்றும் திருந்தி விட்ட அவரை இந்தியர்கள் ஆதரிக்க வேண்டும் என்றும் நேற்று சிலாங்கூர் மாநிலத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தின்போது தேசிய முன்னணி தலைவரும், பிரதமருமான டத்தோஸ்ரீ நஜிப் கூறினார்.

சுல்கிப்ளியின் விமர்சனத்தை மன்னித்து விடுங்கள்; அவர் பேசியதற்காக மன்னிப்பு கேட்டு விட்டார் என்றும் அவர் கூறினார்.

சுல்கிப்ளி நோர்டினை இந்தியர்கள் ஏற்றுக் கொண்டு விட்டனர் என்று கூறிய நஜிப். சில இந்தியர்கள் அவரை கட்டி அணைத்து முத்தம் கொடுத்ததையும் பிரதமர் சுட்டிக் காட்டினார்.

#TamilSchoolmychoice

சுல்கிப்ளி நோர்டின் ஒரு “பின் தங்கிய” (அதாவது பிகேஆர்)  கட்சியில் இருந்தபோது, இந்தியர்கள் குறித்து அறியாமல் விமர்சனம் செய்து விட்டார் என்றும், தற்போது இந்தியர்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுகிறார் என்றும் நஜிப் தெரிவித்தார்.

“இந்தியர்களுக்கு ஆலயங்கள் மற்றும் பள்ளிகள் வேண்டும். அதற்குரிய பணிகளை செய்வேன் என்று சுல்கிப்ளி கூறியிருக்கின்றார்” என்றும் நஜிப் சுல்கிப்ளிக்காக பிரச்சாரம் செய்துள்ளார்.

வழிபாட்டுத் தலத்தை உடைத்தது மோசமான செயல்

பிரச்சாரத்திற்கு பின் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய நஜிப், சிப்பாங் வட்டாரத்தில் ஒரு வீட்டின் வழிப்பாட்டுத் தலத்தை சிலாங்கூர் அரசாங்கம் இடித்தது என்பது சுல்கிப்ளி விமர்சனத்தை விட அச்சம்பவம் மிகவும் மோசமானது என்றும், அதுதான் இந்தியர்களுக்கு அவர்களின் மீது விழுந்த பெரிய அறை என்றும் அவர் கூறினார்.

எனவே சுல்கிப்ளி வேட்பாளர் பற்றி இனிமேலும் யாரும் கேள்வி எழுப்பக் கூடாது என்றும் பிரதமர் தெரிவித்தார்.