Home நாடு தீபாவளியை முன்னிட்டுக் கூடுதலாகப் பதிவு இல்லாத விடுமுறை – சரவணன் அறிவிப்பு

தீபாவளியை முன்னிட்டுக் கூடுதலாகப் பதிவு இல்லாத விடுமுறை – சரவணன் அறிவிப்பு

566
0
SHARE
Ad

மஇகா தேசியத் துணைத் தலைவரும் மனித வள அமைச்சருமான டத்தோஶ்ரீ எம்.சரவணன் அவர்களின் ஊடக அறிக்கை

தீபாவளியை முன்னிட்டுக் கூடுதலாகப் பதிவு இல்லாத விடுமுறை

அரசாங்கத்தில் பணிபுரியும் இந்துக்களுக்கு ஒரு நாள் பதிவில் இல்லாத விடுமுறை வழங்கிய அரசாங்கத்திற்கு என் மனமார்ந்த நன்றியைப் பதிவு செய்கிறேன். தீபாவளி மறுநாளும் பொது விடுமுறையாகக் கருதப்படும் இந்தக் கூடுதல் விடுமுறை 2018 முதல் அமலில் இருந்து வருகிறது.

தனியார் நிறுவனங்களும் இதைக் கவனத்தில் கொண்டு, அவர்களும் தங்கள் பணியாளர்களுக்குக் கூடுதல் பொது விடுமுறையாக வெள்ளிக்கிழமை விடுப்பு தருவார்கள் என எதிர்பார்க்கிறேன். குறிப்பாக தீபாவளியைக் கொண்டாடும் இந்துக்களுக்கு இந்தச் சலுகை வழங்கப்பட வேண்டும்.

#TamilSchoolmychoice

இந்த வருடம் தீபாவளிப் பெருநாள் வியாழக்கிழமை வருவதால், வெள்ளிக்கிழமையன்று இந்த கூடுதல் விடுமுறையைப் பெறுவதன் மூலம் தொடர்ந்து வார இறுதி வரை குடும்பத்தார், உற்றார் உறவினர்களோடு கொண்டாடி மகிழ ஒரு ஏற்ற தருணமாக அமையும்.

மேலும் கடந்த வருடம் கொரோனா தொற்றால் உறவுகள், நண்பர்களோடு ஒன்றாகக் கொண்டாட முடியாத சூழலில் இந்த முறை நமக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே தனியார் நிறுவனங்கள், அதன் முதலாளிகள் இந்த விடுமுறையைச் சீர்தூக்கிப் பார்த்து செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்,

டத்தோ ஸ்ரீ எம்.சரவணன்
மனிதவள அமைச்சர்


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal