Home நாடு அம்னோ பொதுப் பேரவை ஒத்திவைப்பு – உட்கட்சிப் போராட்டங்களின் அறிகுறி!

அம்னோ பொதுப் பேரவை ஒத்திவைப்பு – உட்கட்சிப் போராட்டங்களின் அறிகுறி!

584
0
SHARE
Ad

கோலாலம்பூர் : அடுத்த ஆண்டு 2022 ஜனவரி மத்தியில் நடைபெறவிருந்த அம்னோவின் தேசியப் பொதுப் பேரவை ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. வெள்ளப் பாதிப்புகளின் காரணமாக அம்னோ பொதுப் பேரவை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், அதற்கான பின்னணிக்கு உட்கட்சிப் போராட்டங்களே காரணம் எனக் கருதப்படுகிறது.

வெள்ளப் பாதிப்புகள், அதைத் தொடர்ந்த அரசாங்கத்தின் மோசமான நடவடிக்கைகள் ஆகியவை காரணமாக பிரதமர் இஸ்மாயில் சாப்ரியும், அவரின் அமைச்சர்களும் கடுமையானக் குறைகூறல்களுக்கு ஆளாகியிருக்கின்றனர்.

இதை அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹாமிடியும், நஜிப் துன் ரசாக்கும் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் செயல்பட்டு வருகின்றனர் எனக் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

நேற்று சனிக்கிழமை (டிசம்பர் 25) அம்னோ தலைமைச் செயலாளர் அகமட் மஸ்லான் வெளியிட்ட அறிக்கையில், அம்னோ உச்சமன்றமும், பேரவைக்கான ஏற்பாட்டுக் குழுவும் பேரவையை ஒத்தி வைக்கும் முடிவை எடுத்ததாகத் தெரிவித்தார்.

வெள்ளம் பல இடங்களில் ஏற்படுவதாலும், அதனால் ஏற்படும் பாதிப்புகளில் அம்னோ தலைவர்கள் உதவ வேண்டிய நிலைமை இருப்பதாலும் பேரவை ஒத்தி வைக்கப்படுவதாகவும் அகமட் மஸ்லான் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்தார்.