ஒரு கட்சியின் உள் நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
அதிமுக அலுவலகத்திற்கு வெளியே அதிரடிப் படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அங்கு நடந்து வரும் மோதல்களைத் தணிக்க தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதிமுக அலுவலகத்தில் இருந்து ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்கள் சில கோப்புகளைக் கைப்பற்றி எடுத்துச் சென்றுள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து வானகரத்தில் அதிமுக பொதுக் குழு, செயற்குழுக் கூட்டங்கள் எந்தவிதத் தடையுமின்றி தொடங்கியுள்ளது.
Comments