Home நாடு எல்.சி.எஸ் விவகாரம் : முன்னாள் கடற்படைத் தலைவர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்

எல்.சி.எஸ் விவகாரம் : முன்னாள் கடற்படைத் தலைவர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்

569
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் மலேசியக் கடற்படைத் தலைவர் டான்ஸ்ரீ அகமட் ரம்லி முகமது மீது இன்று செவ்வாய்க்கிழமை காலை எல்.சி.எஸ்  போர்க்கப்பல் (எல்சிஎஸ்) ஊழல் தொடர்பாக மூன்று குற்றவியல் நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து அகமட் ரம்லி விசாரணை கோரினார்.

78 வயதான அகமட் ரம்லி போஸ்டீட் நேவல் ஷிப்யார்ட் என்ற நிறுவனத்தின் (Boustead Naval Shipyard Sdn Bhd) முன்னாள் நிர்வாக இயக்குநர் ஆவார். அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவின் உடன்பாடு இல்லாமல் 21.08 மில்லியன் ரிங்கிட் செலுத்துவதற்கு அவர் ஒப்புதல் அளித்ததாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.

#TamilSchoolmychoice

செட்டாரியா ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு சுமார் 13 மில்லியன் செலுத்துவது தொடர்பான முடிவு போஸ்டீட் நிறுவன வாரியத்தின் அனுமதி இல்லாமல் செய்யப்பட்டது என்ற குற்றச்சாட்டும் அவர் மீது சுமத்தப்பட்டிருக்கிறது.