புத்ரா ஜெயா : இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் தொடங்கிய நஜிப் துன் ரசாக் மேல்முறையீட்டு வழக்கில், அவர் மீதான குற்றச்சாட்டுகளும், தண்டனையும் உறுதிப்படுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவர் இன்றே சிறைக்குக் கொண்டு செல்லப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னர் வழக்கை விசாரிக்கும் அமர்வுக்குத் தலைமை தாங்கும் தலைமை நீதிபதி தெங்கு மைமுன் இந்த வழக்கை விசாரிப்பதிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும் என நஜிப் வழக்கறிஞர்கள் மனு செய்தனர்.
ஆனால், அந்த மனுவையும் நீதிபதிகள் நிராகரித்தனர்.
தெங்கு மைமுனின் கணவரான சமானி, சமூக ஊடகங்களில் நஜிப்புக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்து வருகிறார் என்ற அடிப்படையில் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டது.
அந்த மனு மீதான வாதங்களைச் செவிமெடுத்த தெங்கு மைமுன் அந்த மனுவை நிராகரித்துத் தீர்ப்பளித்தார்.
இதைத் தொடர்ந்து வழக்கின் மேல்முறையீடு தொடபான வாதங்கள் சமர்ப்பிக்கப்பட்டு ஐந்து நீதிபதிகளும் ஏகமனதாக நஜிப் மீதான தண்டனையை உறுதி செய்யும் தீர்ப்பை வழங்கினர்.