Home நாடு தெங்கு மைமுன், வழக்கை விசாரிக்கக் கூடாது என்னும் நஜிப் மனு நிராகரிப்பு

தெங்கு மைமுன், வழக்கை விசாரிக்கக் கூடாது என்னும் நஜிப் மனு நிராகரிப்பு

451
0
SHARE
Ad
தெங்கு மைமுன் துவான் மாட்

புத்ரா ஜெயா : இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் தொடங்கிய நஜிப் துன் ரசாக் மேல்முறையீடு வழக்கில், வழக்கை விசாரிக்கும் அமர்வுக்குத் தலைமை தாங்கும் தலைமை நீதிபதி தெங்கு மைமுன் இந்த வழக்கை விசாரிப்பதிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும் என நஜிப் வழக்கறிஞர்கள் மனு செய்துள்ளனர்.

தெங்கு மைமுனின் கணவரான சமானி, சமூக ஊடகங்களில் நஜிப்புக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்து வருகிறார் என்ற அடிப்படையில் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டது.

அந்த மனு மீதான வாதங்களைச் செவிமெடுத்த தெங்கு மைமுன் அந்த மனுவை நிராகரித்துத் தீர்ப்பளித்தார்.

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்து வழக்கின் மேல்முறையீடு தொடர்கிறது.