Home நாடு தேசிய கல்வி ஆலோசனை மன்றத்தில் தமிழர் பிரதிநிதி இல்லை – சமூக ஊடகங்களில் கொந்தளிப்பு –...

தேசிய கல்வி ஆலோசனை மன்றத்தில் தமிழர் பிரதிநிதி இல்லை – சமூக ஊடகங்களில் கொந்தளிப்பு – முடிவு மாறுமா?

752
0
SHARE
Ad
பாட்லீனா சிடேக்

கோலாலம்பூர் : கடந்த சில நாட்களாக இந்தியர் சார்ந்த சமூக ஊடகங்களிலும், தமிழ் நாளிதழ்களிலும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் விவகாரம் தேசிய கல்வி ஆலோசனை மன்றத்தில் தமிழர்கள் யாரும் இடப் பெறவில்லையே என்பது குறித்துத்தான்.

இதன் தொடர்பில் எதிர்வரும் புதன்கிழமை ஜனவரி 25-ஆம் தேதி மனித வள அமைச்சர் சிவகுமார், கல்வி அமைச்சர் பட்லினாவைச் சந்திக்கவிருக்கிறார்.

இதற்கிடையில் பல இந்தியத் தலைவர்களும் சமூக அமைப்புகளும் கல்வி அமைச்சின் இந்த முடிவுக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

528 தமிழ்ப் பள்ளிகளைக் கொண்டிருக்கும் நம் நாட்டின் பள்ளிக் கல்விக் கட்டமைப்பில் ஏன் ஒரு தமிழர் கூட தேசியக் கல்வி ஆலோசனை மன்றத்தில் நியமிக்கப்படவில்லை என தமிழர் அமைப்புகள் கொந்தளிக்கத் தொடங்கியுள்ளன.

இதைத் தொடர்ந்து கல்வி அமைச்சின் முடிவு மாற்றிக் கொள்ளப்படுமா? தமிழ்ப் பள்ளிகளின் பிரச்சனைகளைக் கவனிக்க தமிழ் கல்வியாளர் ஒருவர் தேசிய கல்வி ஆலோசனை மன்றத்தில் நியமிக்கப்படுவாரா? என்னும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.