Home உலகம் நெதர்லாந்தில் வலது சாரி கீர்ட் வில்டர்ஸ் பிரதமராகலாம்!

நெதர்லாந்தில் வலது சாரி கீர்ட் வில்டர்ஸ் பிரதமராகலாம்!

471
0
SHARE
Ad
கீர்ட் வில்டர்ஸ்

ஆம்ஸ்டர்டாம் : நடந்து முடிந்த நெதர்லாந்து பொதுத் தேர்தலில் அதிகமான தொகுதிகளைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியில் வலது சாரி தலைவரான கீர்ட் வில்டர்ஸ் ஈடுபட்டிருக்கிறார்.

முஸ்லீம் மக்களுக்கு எதிரான கருத்துகளை பகிரங்கமாக வெளிப்படுத்திவருபவர் கீர்ட் வில்டர்ஸ் என்பதால் அவருக்கு எதிரான முஸ்லீம் இயக்கங்கள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

எதிர்பார்க்கப்பட்டதைப் போல, துருக்கிய – குர்திஷ் இனப் பெண்மணியான டிலான் யெசில்கோஸ் (DILAN YESILGOZ) நெதர்லாந்தின் பொதுத் தேர்தலில் முதன்மை இடத்தைப் பிடிக்க முடியவில்லை.

#TamilSchoolmychoice

பிரதமராக இருக்கும் மார்க் ரூட்டுக்கு பதிலாக நெதர்லாந்தின் புதிய பிரதமர்  தேர்ந்தெடுக்கப்படுவார்.

ஐரோப்பிய நாடுகளில் கடந்த 100 ஆண்டுகளில் அந்நிய நாட்டவர்களின் குடியேற்றங்களால் அந்தந்த நாடுகளின்  மக்கள் தொகையும்  இன ரீதியான விழுக்காடு மாற்றம் கண்டது.

அரசியலிலும் ஈடுபட தொடங்கிய இந்த குடியேறிகள் பல நாடுகளில் முக்கிய பதவிகளுக்கு வந்துள்ளனர். போர்ச்சுகல் நாட்டின் பிரதமராக இருந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். பிரிட்டனின் தற்போதைய பிரதமர் ரிஷி சுனாக் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.

நெதர்லாந்து நாட்டில் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த புதன்கிழமை (நவம்பர் 22) நடைபெற்றது.

அந்த தேர்தலில் போட்டியிடுபவர்களில் 46 வயது என்ற பெண்மணி டிலான் யெசில்கோஸ் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார். எனினும் தீவிர வலது சாரி கருத்துகளைக் கொண்டிருந்த கீர்ட் வில்டர்ஸ் வெற்றி பெற்றிருக்கிறார்.