Home வாழ் நலம் முலாம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!

முலாம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!

606
0
SHARE
Ad

mulaamகோலாலம்பூர், ஏப்ரல் 26- முலாம் பழத்தில் 95% நீர்ச்சத்தும், பலவிதமான வைட்டமின்க‌ளும், நார்ச்சத்தும் நிறைந்துள்ள‌தால் இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

அதுமட்டுமின்றி இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் இவை உடலுக்குக் குளிர்ச்சியைத் தருவதில் சிறந்த பழமாகவும் உள்ளது.

மேலும் அவை நெஞ்செரிச்ச‌லைக் குறைக்கவும்  சிறுநீரகத்தைச் சுத்தப்படுத்தவும் உதவுகின்றன. முலாம் பழத்தில் சர்க்கரையின் அளவும், கலோரியும் குறைவு.

#TamilSchoolmychoice

அதனால், உடல் எடையைக் குறைத்து அழகான உடலமைப்பு பெற விரும்புகிறவர்களுக்கு ஏற்ற பழமாகவும் இருக்கிறது.

ஏனெனில் இந்த பழத்தில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்தது. இதனால், இதயம் தொடர்பான நோய்களையும், புற்றுநோயையும் தடுக்க ஏற்றதாகவும் உள்ளது.