Home நாடு தகவல் தொடர்புகள் உலகளவில் துண்டிப்பு – விமானப் பயணங்களில் சிக்கல்!

தகவல் தொடர்புகள் உலகளவில் துண்டிப்பு – விமானப் பயணங்களில் சிக்கல்!

322
0
SHARE
Ad

கோலாலம்பூர் : உலகம் எங்கிலும் திடீரென இணைய, தகவல் தொடர்பு கொள்இட அளவு மீறல்களால் (outage) தொடர்புகள் துண்டிக்கப்பட்டதால் விமானப் பயணங்களில் பாதிப்புகள் ஏற்பட்டன.

இருப்பினும், தங்களின் விமானப் பயணங்கள் எதுவும் இரத்து செய்யப்படவில்லை என ஏர் ஆசியா விமான நிறுவனம் அறிவித்தது.

பல விமான நிலையங்களில் பயணிகள் நீண்டதூரத்திற்கு வரிசையில் நிற்கும் புகைப்படங்களும் காணொலிகளும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

#TamilSchoolmychoice

வங்கிகளிலும் வங்கிப்பணப் பரிமாற்றம் தொடர்பில் தடைகள் ஏற்பட்டதால் வங்கிகளிலும் நீண்ட தூர வரிசைகள் காணப்பட்டன.

இரயில் பயணங்களில் பயணச் சீட்டு பதிவுகளிலும் இடையூறுகள் ஏற்பட்டன என மலாயன் ரயில்வே நிறுவனம் அறிவித்தது.