Home நாடு பினாங்கில் கடும் மழை – புயல் – வெள்ளம்

பினாங்கில் கடும் மழை – புயல் – வெள்ளம்

253
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன் : பினாங்கு மாநிலத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 17) அதிகாலையில் பெய்த கடும் மழையினாலும் பலத்த புயல் காற்றினாலும் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பல மரங்கள் வேரோடு சாய்ந்தன.

இன்று அதிகாலை 5.00 மணி தொடங்கி காலை 9 மணி வரை கடும் மழை பெய்தது. எனினும் இதுவரையில் வெள்ள நிவாரண மையங்கள் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை.

பாயா தெருபோங், ரெலாவ், புக்கிட் ஜாம்புல், புலாவ் திக்குஸ், பாயான் பாரு, பாலிக் புலாவ் ஆகிய வட்டாரங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்ததாகத் தகவல்கள் தெரிவித்தன.

#TamilSchoolmychoice

பெர்மாத்தாங் ராவா, பெர்டா, பாயான் லெப்பாஸ் நிபோங் திபால் ஆகிய பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டன.

சில பகுதிகளில் மரங்கள் சாய்ந்ததால் கார்களுக்கு சேதங்கள் ஏற்பட்டன. விபத்துகளும் ஏற்பட்டன.