Home நாடு தீபாவளி கொண்டாட்டக் குதூகலத்தை மாணவர்களுக்கு வழங்கிய பினாங்கு இந்து அறப்பணி வாரியம்!

தீபாவளி கொண்டாட்டக் குதூகலத்தை மாணவர்களுக்கு வழங்கிய பினாங்கு இந்து அறப்பணி வாரியம்!

86
0
SHARE
Ad

கோலாலம்பூர் : தீபாவளித் திருநாளை முன்னிட்டு, குதூகலத்தையும், மகிழ்ச்சியையும் வசதி குறைந்த மாணவர்களிடத்திலும் கொண்டுவர பினாங்கு இந்து அறப்பணி வாரியம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

கடந்த அக்டோபர் 19-ஆம் நாள், பினாங்கு பினாங்கு இந்து அறப்பணி வாரியம், அதன் தலைவரும் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ்.என். ராயர் சேவை அலுவலகத்துடன் இணைந்து, கம்தார் புக்கிட் ஜம்புலில் தீபாவளி உடைகள் வாங்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.

இந்த வணிக வளாகத்திற்கு ஸ்காட்லாந்து சாலையிலுள்ள ராமகிருஷ்ண ஆசிரம மாணவ-மாணவிகள் 45 பேரைப் பாராட்டும் வகையில் பயணம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நலத்திட்ட இல்லம் சமூகத்தில் விளிம்பு நிலையிலான மாணவர்கள், இளைஞர்களுக்கு சமூக பாதுகாப்பும், கல்வியும் வழங்குகிறது.

#TamilSchoolmychoice

தீபாவளி உடைகள் பரிசாக வழங்கப்பட்டதுடன், குழந்தைகளுக்கு உணவும் வழங்கப்பட்டது. இந்த தீபாவளித் திருவிழாவைக் கொண்டாடத் தயாராகும் போது, நம்முடைய வாழ்வாதாரத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து, நாட்டில் யாரும் புறக்கணிக்கப்படுவதாக உணராமல் இருக்க, மேலும் பல நலத்திட்டங்களை அதிகரிப்போம் என இந்து அறப்பணி வாரியத்தின் துணைத் தலைவரும் செனட்டருமான டாக்டர் லிங்கேஸ்வரன் அருணாசலம் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பினாங்கு மாநில தலைவர் ஒங் ஆ தேயாங், பினாங்கு இந்து அறப்பணி வாரியம் துணைத் தலைவர் செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன், இந்து அறப்பணி வாரிய ஆணையரும் பத்து உபான் சட்டமன்ற உறுப்பினருமான குமரேசன் ஆறுமுகம், இந்து அறப்பணி வாரிய ஆணையர் ஷங்கர், டத்தோ தினகரன் ஜெயபாலன் ஆகியோருடன் ஜசெக தலைவர் லிம் குவான் எங்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.