Home உலகம் லித்துவேனியா: தரையிறங்கும்போது மோதி வீட்டிற்குள் புகுந்த விமானம்!

லித்துவேனியா: தரையிறங்கும்போது மோதி வீட்டிற்குள் புகுந்த விமானம்!

65
0
SHARE
Ad

வில்னியஸ்: டிஎச்எல் (DHL) நிறுவனத்தின் சரக்கு விமானம், லிதுவேனியாவின் தலைநகரில் உள்ள விமான நிலையத்தை அணுகும் போது அருகிலுள்ள வீடொன்றில் மோதியது. இதனால் குறைந்தது ஒருவருக்கு உயிரிழப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திங்கள்கிழமை (நவம்பர் 25) காலை நடைபெற்ற இந்த விபத்தின் காரணம் உடனடியாக தெரியவில்லை.

லித்துவேனியாவின் தீயணைப்புப் பிரிவின் தலைவர் கூறுகையில், விமானம் சில நூறு மீட்டர்கள் வரை சீறிப்பாய்ந்ததாகவும், காடுகள் சூழ்ந்த பகுதியிலுள்ள ஒரு கட்டடத்தில் இருந்து புகைமூட்டம் எழுந்த புகைப்படங்கள் காணப்பட்டதாகவும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“வீட்டின் சுற்றுவட்டார வசதிகள் தீப்பற்றியது, வீடு சிறிய அளவில் சேதமடைந்தது. ஆனால், எங்களால் மக்களை வெளியேற்ற முடிந்தது,” என தீ மற்றும் மீட்புப் பிரிவின் தலைவர் ரெனடஸ் போஜேலா கூறினார்.

விபத்திற்குப் பிறகு இரண்டு பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், ஒருவருக்கு பின்னர் மரணம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

உயிரிழந்த நபர் விமானத்தின் குழுவைச் சேர்ந்த ஒருவராவார். ஆனால் அவர் விமானி அல்ல. தீயணைப்பாளர்கள் இரண்டு விமானிகளையும் விமானத்திலிருந்து மீட்டனர். அவர்களில் ஒருவருக்கு மற்றவரை விட அதிகமாக காயம் ஏற்பட்டது என்று லித்துவேனிய காவல்துறையின் பொது ஆணையர் அருனாஸ் பவுலாஸ்கஸ் தெரிவித்தார்.

பவுலாஸ்கஸ் செய்தியாளர் சந்திப்பில், விபத்தின் காரணங்கள் இன்னும் தெரியவில்லை என்று தெரிவித்தார். அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள், மேலும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் குழுவினரிடமிருந்து தகவல்களைச் சேகரிக்க காவல்துறையினர் சென்றனர்.

பொது ஆணையர் மேலும், தொழில்நுட்பக் கோளாறு மற்றும் மனித தவறு போன்ற பல காரணங்களை ஆய்வு செய்து வருவதாகவும், தீவிரவாத நடவடிக்கையின் வாய்ப்பையும் நிராகரிக்க முடியாது எனவும் கூறினார்.

லிதுவேனியாவின் விமான நிலைய அதிகாரிகள், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட விமானம் ஜெர்மனியின் லீப்சிக் நகரிலிருந்து வந்த டிஎச்எல் (DHL) சரக்கு விமானம் என்றும் போயிங் 737 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம் 31 ஆண்டுகள் பழமையானது என்றும் தெரிவித்தனர்.

ஜெர்மனியின் பான் நகரில் தலைமையிடமான டிஎச்எல் நிறுவனம் உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை.