Home இந்தியா ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு – இன்னொரு இடைத் தேர்தலுக்குத் தயாராகும் தமிழ் நாடு

ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு – இன்னொரு இடைத் தேர்தலுக்குத் தயாராகும் தமிழ் நாடு

170
0
SHARE
Ad

சென்னை : காங்கிரஸ் கட்சியின் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று சனிக்கிழமை (டிசம்பர் 14) காலமானார். அவருக்கு வயது 75.

இளங்கோவனின் தந்தையார் ஈவெகி சம்பத் சொல்லின் செல்வர் என அழைக்கப்பட்டவர். திமுக தொடங்கப்பட்டபோது அதன் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். சம்பத் தந்தையார் கிருஷ்ணசாமி தந்தை பெரியாரின் அண்ணன் ஆவார்.

சம்பத் மகன் இளங்கோவனோ, காங்கிரஸ் கட்சியில் இணைந்து உழைத்தார்.

#TamilSchoolmychoice

தந்தை ஈவிகே சம்பத்தின் மறைவைத் தொடர்ந்து காங்கிரசில் இணைந்தார் இளங்கோவன்.

பின்னர் நடிகர் சிவாஜி கணேசனுடன் கட்சி தொடங்கியபோது அவருடன் இணைந்தார் இளங்கோவன்.

1984 ஆம் ஆண்டு, அதிமுக – காங்கிரஸ் கூட்டணியில், சத்தியமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இளங்கோவன் சத்தியமங்கலம், ஈரோடு கிழக்கு ஆகிய தொகுதிகளில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2004 கோபிசெட்டிபாளையம் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார். ஒருகாலகட்டத்தில் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டு தன் மகனுக்கு வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரின் திருமகன் 2023-இல் காலமானார். மகனின் மறைவினால் 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலில் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் இளங்கோவன் 13 நவம்பர் 2024 அன்று அனுமதிக்கப்பட்டார். இன்று சனிக்கிழமை (14 டிசம்பர்) காலமானார்.

அவரின் மறைவு காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மீண்டும் இடைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.