பத்துமலை : பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய வளாகத்தில் அமைந்திருக்கும் இந்திய கலாச்சார மையம் எதிர்வரும் 19 ஜனவரி 2025-ஆம் நாள் திறப்பு விழா காண்கிறது. ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா இந்த தகவலை வெளியிட்டார்.
மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் இந்திய கலாச்சார மையத்தைத் திறந்து வைப்பார்.
திறப்பு விழா நிகழ்ச்சிக்கு மஇகா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் முன்னிலை வகிப்பார்.
ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா தலைமையில் இந்தியர் கலாச்சார மையம் பத்துமலையில் திறப்பு விழா காணும்.