இதற்கு முன்னர் இவ்வாறு அதிபர் ஒருவரின் பதவியேற்பு சடங்கு உள் அரங்கிலேயே நடத்தப்பட்டது 1980-ஆம் ஆண்டில்! அந்த அதிபர் ரொனால்ட் ரீகன். அதற்குப் பின்னர் அதிபராகப் பதவியேற்றவர்கள் அனைவரும் திறந்த வெளி அரங்கில் – வெள்ளை மாளிகையின் முன்புதான் – பதவியேற்றுக் கொண்டார்கள்.
பாதுகாப்பும் ஒரு காரணமாக இருக்கலாம்.
டிரம்ப் பதவியேற்றதும் முதல் கட்டமாக அவர் பிறப்பிக்கப் போகும் அதிரடித் திட்டங்கள் என்னவாக இருக்கும் – அதனால் பாதிப்படையப் போகும் உலக நாடுகள் யாவை – வணிகங்கள் யாவை – சீனா மீதான அணுகுமுறை – இஸ்ரேல், ஹமாஸ் போர்நிறுத்தம் – ஈரான் – ரஷியா, உக்ரேன் போர் – கிரின்லாந்து தீவை அமெரிக்க ஆக்கிரமிக்குமா? – கனடாவுடனான நல்லுறவுகள் மேம்படுமா? – என பல விவகாரங்கள் என டிரம்பின் அடுத்த கட்ட உத்தரவுகளுக்காக – நடவடிக்கைகளுக்காகக் காத்திருக்கின்றன.