சென்னை: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இன்று இணைந்துள்ள ஆதவ் அர்ஜூனா அந்தக் கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் என்ற பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் (விசிக) துணைப் பொதுச் செயலாளராக இருந்து நீக்கப்பட்ட ஆதவ் அர்ஜூனா இன்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 31) நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்துள்ளார்.
விஜய் மற்ற சில புதிய பொறுப்பாளர்களையும் தன் கட்சிக்கு நியமித்துள்ளார். அவர்களின் விவரங்கள் பின்வருமாறு:
1. திரு. ஆதவ் அர்ஜுனா B.A. (Political sciener) – தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர்
2. திரு. CTR. நிர்மல் குமார் B.E.. L.L.B. – துணைப் பொதுச்செயலாளர் (தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு)
3. திரு. P.ஜெகதீஷ் தலைமைக் கழக இணைப் பொருளாளர்
4. திரு. A.ராஜ்மோகன் கழகக் கொள்கைப் பரப்புச் செயலாளர்
5. திரு. லயோலா மணி (எ) A.மணிகண்டன் M.A. கழகக் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்
பணபலமும் சிறந்த கட்டமைப்பை உருவாக்கக் கூடிய ஆற்றலும் நிறைந்த ஆதவ் அர்ஜூனா தவெகவில் இணைவது அந்தக் கட்சிக்குக் கூடுதல் பலமாக அமையும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அதிமுகவில் ஐடி விங்க் என்னும் தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த சி.டி.ஆர்.நிர்மல் குமார் என்பவரும் தவெகவில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் ராஜ்மோகன் நல்ல தமிழ்ப் புலமை கொண்டவர். பல விவாத மேடைகளிலும் பட்டிமன்றங்களிலும் சிறப்பாகப் பேசி தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருப்பவர்.