Home நாடு முஸ்லீம் அல்லாதோர் நிகழ்ச்சிகளில் முஸ்லீம்கள் பங்கேற்க வழிகாட்டிகள் தேவையில்லை – அன்வார் நிராகரித்தார்!

முஸ்லீம் அல்லாதோர் நிகழ்ச்சிகளில் முஸ்லீம்கள் பங்கேற்க வழிகாட்டிகள் தேவையில்லை – அன்வார் நிராகரித்தார்!

258
0
SHARE
Ad
நேற்று (பிப்ரவரி 7) அன்வார் பத்துமலைக்கு வருகை தந்தபோது…

புத்ரா ஜெயா: முஸ்லீம் அல்லாதோர் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முஸ்லீம்களுக்கான வழிகாட்டிகள் தேவையில்லை என்றும் அதனை நேற்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) கூடிய அமைச்சரவை நிராகரித்தது என்றும் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

நேற்று பத்துமலைக்கு தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு வருகை தந்த பிரதமர், முஸ்லீம்களுக்கு, முஸ்லீம் அல்லாதாரின் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றி ஏற்கனவே நன்கு தெரியும் என சுட்டிக் காட்டினார். “உதாரணமாக, பத்துமலை இந்து ஆலயத்திற்கு வந்திருக்கும் முஸ்லீமான எனக்கு என்ன நடைமுறைகள் கடைப்பிடிக்க வேண்டும் என்பது நன்கு தெரியும். அதே போல, இங்கு வந்திருக்கும் அமைச்சர் கோபிந்த் சிங் டியோவும் வேறு மதத்தைச் சேர்ந்தவர். அவருக்கும் என்ன நடைமுறைகள் கடைப்பிடிக்க வேண்டும் என்பது தெரியும். எனவே, இந்த விவகாரத்தில் புதிதாக நடைமுறைகள் எதுவும் தேவையில்லை” எனத் தெரிவித்தார்.

இஸ்லாமியத் துறை விவகாரங்களுக்கான அமைச்சு வெளியிட்டிருப்பது பலதரப்புகளிடையே சர்ச்சைகளை எழுப்பியிருக்கிறது.

#TamilSchoolmychoice

மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எம்.சரவணனும் இந்தப் புதிய வழிகாட்டிகள் குறித்து சாடியிருந்தார்.