Home உலகம் உக்ரேன் போர் நிறுத்தம்: டிரம்ப், ஜெலென்ஸ்கி, வான்ஸ் வெள்ளை மாளிகையில் வாக்குவாதம்

உக்ரேன் போர் நிறுத்தம்: டிரம்ப், ஜெலென்ஸ்கி, வான்ஸ் வெள்ளை மாளிகையில் வாக்குவாதம்

76
0
SHARE
Ad
வெள்ளை மாளிகையில் ஜெலன்ஸ்கி-டிரம்ப்…

வாஷிங்டன்: அதிபர் டொனால்ட் டிரம்ப், துணை அதிபர் ஜேடி வான்ஸ் மற்றும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோர் வெள்ளை மாளிகையின் ஒவல் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

உக்ரேன் போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க ஜெலென்ஸ்கி வாஷிங்டன் வந்துள்ளார்.

வான்ஸ், ஜெலென்ஸ்கியை “பிரச்சார சுற்றுப்பயணங்களை மேற்கொள்வதாக” குற்றம் சாட்டினார்.

#TamilSchoolmychoice

வான்ஸ் ஜெலென்ஸ்கியிடம், “நீங்கள் ஒவல் அலுவலகத்திற்கு வந்து அமெரிக்க ஊடகங்களின் முன் இதை விவாதிக்க முயற்சிப்பது மரியாதையற்றது என நினைக்கிறேன். உங்களுக்கு மனிதவள பிரச்சினைகள் இருப்பதால் நீங்கள் கட்டாய ஆட்சேர்ப்பு செய்பவர்களை போர்முனையில் முன்னணிக்கு அனுப்புகிறீர்கள். நீங்கள் அமெரிக்க அதிபருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்” என்றார்.

ஜெலென்ஸ்கி, “நீங்கள் எப்போதாவது உக்ரைனுக்கு சென்றிருக்கிறீர்களா?” என்று பதில் கேள்வி தொடுத்துள்ளார்.

வான்ஸ் உடனடியாக, “நீங்கள் மக்களை பிரச்சார சுற்றுப்பயணத்திற்கு அழைத்து வருகிறீர்கள். உங்கள் நாட்டின் அழிவைத் தடுக்க முயற்சிக்கும் நிர்வாகத்தைத் தாக்க அமெரிக்க ஒவல் அலுவலகத்திற்கு வருவது மரியாதையாக இருக்குமா? நீங்கள் அக்டோபரில் பென்சில்வேனியாவுக்குச் சென்று எதிர்க்கட்சிக்காக பிரச்சாரம் செய்தீர்கள். அமெரிக்காவுக்கும்  உங்கள் நாட்டைக் காப்பாற்ற முயற்சிக்கும் அதிபருக்கும் சில நன்றி வார்த்தைகளை வழங்குங்கள்” என்று பதிலளித்தார்.

ஜெலென்ஸ்கி பதிலளித்தார், “எல்லோருக்கும் பிரச்சினைகள் உள்ளன, உங்களுக்கும் கூட! ஆனால் உங்களுக்கு அழகான கடல் உள்ளது, இப்போது அதை உணரவில்லை – ஆனால் எதிர்காலத்தில் நீங்கள் உணர்வீர்கள்.”

டிரம்ப் குறுக்கிட்டு, “நாங்கள் என்ன உணரப் போகிறோம் என்று எங்களுக்குச் சொல்லாதீர்கள். நாங்கள் ஒரு பிரச்சினையைத் தீர்க்க முயற்சிக்கிறோம். நாங்கள் என்ன உணரப் போகிறோம் என்று எங்களுக்குச் சொல்லாதீர்கள். நாங்கள் என்ன உணரப் போகிறோம் என்பதை நிர்ணயிக்கும் நிலையில் நீங்கள் இல்லை. நீங்கள் இப்போது, ஒரு நல்ல நிலையில் இல்லை. உங்களிடம் இப்போது வாய்ப்புகள் இல்லை… நீங்கள் மூன்றாம் உலகப் போரை உருவாக்க சூதாடுகிறீர்கள். இவ்வாறு நாம் பேச்சு வார்த்தையில் ஈடுபடுவது மிகவும் கடினமாக இருக்கும். நீங்கள் மேலும் நன்றியுள்ளவராக இருக்க வேண்டும்” என்றார்.

எனினும் டிரம்ப், இந்தப் பத்திரிகையாளர் சந்திப்புக்குப் பின்னர் தாங்கள் ஒன்றாக மதிய உணவருந்தப் போவதாகவும் தங்களின் விவாதங்களைத் தொடரப் போவதாகவும் தெரிவித்தார்.