Home இந்தியா ‘வள்ளுவர் மறை-வைரமுத்து உரை’ – நூல் ஜூலை 13-இல் வெளியீடு!

‘வள்ளுவர் மறை-வைரமுத்து உரை’ – நூல் ஜூலை 13-இல் வெளியீடு!

168
0
SHARE
Ad

சென்னை: ஆண்டுகள் இரண்டாயிரம் கடந்து இன்னும் இளமைப் பொலிவோடும், அள்ள அள்ளக் குறையாத அமுதப் புதையலாகவும், கருத்துப் பேழையாகவும் திகழும் தமிழ் இலக்கியப் திருக்குறள். அதற்கு பல தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் உரையெழுதியுள்ளனர். அந்த வரிசையில் திருக்குறளுக்குத் தனது பாணியில் உரை எழுதியிருக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து.

அவர் திருக்குறளுக்கு உரையெழுதியிருக்கும் நூலுக்கு ‘வள்ளுவர் மறை வைரமுத்து உரை’ என பெயர் சூட்டியிருக்கிறார் வைரமுத்து.

அந்த நூல் வெளியீடு குறித்து கீழ்க்காணும் கவிதையை காணொலியாகப் பதிவிட்டு, தன் நூலில் முகப்பையும் வெளியிட்டிருக்கிறார் வைரமுத்து.

#TamilSchoolmychoice

உலகத் தமிழ் உறவுகளே!
வணக்கம்.

வள்ளுவர் மறை
வைரமுத்து உரை
ஜூலை 13 வெளியாகிறது

இன்று
உலகத் தமிழர் கண்களுக்கு
முதன்முதலாக முகப்போவியத்தை
வெளியிடுகிறேன்

முதலில்
ஓவியம் படைக்கிறேன்
ஜூலை 13இல்
வள்ளுவர்
காவியம் படைக்கிறேன்

இதோ..
நீங்கள்
முத்தமிட்டு மகிழ
முகப்போவியம்