Home 13வது பொதுத் தேர்தல் புதிய அமைச்சரவைப் பட்டியலில் சரவாக் மாநிலத்திலிருந்து கூடுதலாக 4 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்

புதிய அமைச்சரவைப் பட்டியலில் சரவாக் மாநிலத்திலிருந்து கூடுதலாக 4 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்

690
0
SHARE
Ad

sarawak candidateகோலாலம்பூர், மே16 – பிரதமர் நஜிப் துன் ரசாக் நேற்று வெளியிட்ட புதிய அமைச்சரவைப் பட்டியலில் சரவாக் மாநிலத்திலிருந்து மட்டும் 8 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர்.

கடந்த முறை வழங்கப்பட்டிருந்த 4 இடங்களைக் காட்டிலும் கூடுதலாக தற்போது 4 அமைச்சர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சரவாக் மாநில அமைச்சர்கள் பட்டியல் பின்வருமாறு:-

#TamilSchoolmychoice

பிரதமர் துறை அமைச்சர்களாக டத்தோஸ்ரீ இட்ரீஸ் ஜாலா, பிபிபி (Parti Pesaka Bumiputera Bersatu) கட்சியைச் சேர்ந்த நான் சீ சுக்ரி மற்றும் பிஆர்எஸ் (Parti Rakyat Sarawak) கட்சியைச் சேர்ந்த டத்தோ ஜோசப் இந்துலு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மனிதவள அமைச்சராக டத்தோ ரிச்சர் ரியோட் ஜாயிம் (எஸ்.யூ.பி.பி கட்சி – Sarawak United People’s Party), உள்நாட்டு வர்த்தக பயனீட்டாளர் அமைச்சராக டத்தோ டாக்ளஸ் உங்கா அம்பாஸ்(பிபிபி கட்சி), எரிபொருள் பசுமை தொழில்நுட்பம் குடிநீர் அமைச்சராக டத்தோஸ்ரீ டாக்டர் மெக்ஸிமஸ் ஒங் கிலி (பிபிஎஸ் கட்சி) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதோடு பொதுப்பணித்துறை அமைச்சராக டத்தோ வாடிலா யூசோப் (பிபிபி கட்சி), மகளிர் குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சராக டத்தோ ரோஹானி அப்துல் கரீம்(பிபிபி கட்சி) ஆகியோரும் அமைச்சரவைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

புதிய அமைச்சரவையில் சரவாக் மாநிலத்தில் இருந்து மட்டும் 8 அமைச்சர்கள் இடம்பெற்றிருப்பதால் தேசிய முன்னணி அம்மாநிலத்தில் வலுப்பெற்று, எதிர்கட்சிகளுக்கு பெரும் சவாலாக விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.