Home 13வது பொதுத் தேர்தல் புதிய அமைச்சரவையில் சபா மாநிலத்தைச் சேர்ந்த 5 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்

புதிய அமைச்சரவையில் சபா மாநிலத்தைச் சேர்ந்த 5 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்

563
0
SHARE
Ad

NAJIB SABAHகோலாலம்பூர், மே 16 – பிரதமர் நஜிப் துன் ரசாக் நேற்று வெளியிட்ட புதிய அமைச்சரவைப் பட்டியலில் சபா மாநிலத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களுக்கு 5 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அவர்களில் பிபிஆர்எஸ் (Parti Bersatu Rakyat Sabah) கட்சியைச் சேர்ந்த ஜோசப் குரூப் பிரதமர் துறை அமைச்சராகவும், அம்னோவைச் சேர்ந்த அனீபா அமான் வெளியுறவுத் துறை அமைச்சராகவும், அப்கோ  (United Pasok Momogun Kadazandusun Murut Organisation) வைச் சேர்ந்த  ஈவோன் ஈபின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகள் துறை அமைச்சராகவும், அம்னோவைச் சேர்ந்த ஷாபி அப்தால் கிராமப்புற மற்றும் வட்டார வளர்ச்சித் துறை அமைச்சராகவும் மற்றும் அம்னோவைச் சேர்ந்த  டத்தோ அப்துல் ரஹ்மான் டாலான் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சபா மாநிலத்தில் இருந்து  முன்பை விட, தற்போது கூடுதலாக 3 அமைச்சர்கள் சேர்ந்து, மொத்தம் 5 அமைச்சர்கள் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பதால், அம்மாநிலத்தில் தேசிய முன்னணி மேலும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice