Home நாடு தலைவர் பதவிக்கு வரும் சவால்களை சந்திக்கத் தயார் – நஜிப் அறிவிப்பு

தலைவர் பதவிக்கு வரும் சவால்களை சந்திக்கத் தயார் – நஜிப் அறிவிப்பு

620
0
SHARE
Ad

Najibகோலாலம்பூர், ஜூன் 1 – எதிர்வரும் அம்னோ கட்சித் தேர்தலில் எனது பதவிக்கு வரும் சவால்கள் அனைத்தையும் எதிர் கொள்ளத் தயார். காரணம் அம்னோ ஒரு ஜனநாயகக் கட்சி என்று பிரதமர் நஜிப் துன் ரசாக் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

நேற்று நடந்த அம்னோ உச்ச மன்ற கூட்டத்தில், உங்கள் பதவிக்கு வேறு யாரும் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கிறீர்களா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்குப்  பதிலளித்த நஜிப் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் “அம்னோ தனது கட்சித் தேர்தலை ஆராய்ந்து முதற்கட்டமாக சில மாற்றங்களைச் செய்துள்ளது.

#TamilSchoolmychoice

ஏற்னவே தலைவர் பதவிக்குப் போட்டியிட வேட்பாளர்களுக்கு, நிறைய கட்டுப்பாடுகள் இருந்தன.

ஆனால் தற்போது அந்த கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டதால் இனி அனைத்து அம்னோ உறுப்பினர்களும் தலைவர் பதவிக்குப் போட்டியிடலாம் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய தேர்தல் முறை எதிர்வரும் கட்சித் தேர்தலில் முதற் கட்டமாக பயன்படுத்தப்பட உள்ளது” என்றும் நஜிப் தெரிவித்துள்ளார்.

அம்னோவில் செய்யப்படும் அனைத்து மாற்றங்களும் கட்சி உறுப்பினர்களிடமிருந்து கருத்து பெற்ற பிறகே செய்யப்படுகிறது என்றும், அம்னோ என்பது உறுப்பினர்களின் இதயத்திற்கு மிக நெருக்கமான கட்சி, எனவே உறுப்பினர்களின் வார்த்தைகளுக்கு இங்கு மிகுந்த மதிப்பளிக்கப்படும் என்றும் நஜிப் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த மே 5 ஆம் தேதி நடைபெற்ற 13 ஆவது பொதுத்தேர்தலுக்குப் பிறகு அம்னோ உச்ச மன்றத்தால் நடத்தப்பட்ட முதல் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தேசிய முன்னணியின் கூட்டணிக் கட்சிகள் அனைத்தையும் இணைத்து ஒரே கட்சியாக உருவாக்குமாறு கெராக்கான் தலைவர் சாங் கோ யோன் யோசனை கூறியுள்ளார்.

காரணம் நடந்து முடிந்த 13 ஆவது பொதுத்தேர்தலில் நகர்புறத்தில் வாழும் மக்கள் மற்றும் இளம் வாக்காளர்கள் இனவாரியான கொள்கைகளை விரும்பவில்லை என்பது தெளிவாகியுள்ளது என்று சாங் கூறியுள்ளார்.